தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. நாட்டின் ஊழல்மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது “ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஒரு பெண்ணாக அவர் திமுகவை எதிர்கொண்டு வளர்ந்து வந்த விதம் குறித்து பலமுறை நான் பேசி இருக்கிறேன். அவரது பெயரை எங்கும் நான் குறிப்பிடவில்லை. நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழலில் மூழ்கி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆட்சியை கடந்து ஊழல் பிரச்சனையாக உள்ளது என்று தான் பேசினேன். ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும் என்று கூறினார்.