தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது சலார், ஆதிபுரூஸ், ப்ராஜெக்ட் கே போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா நடிகர் பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, நடிகர் பிரபாஸின் விருந்தோம்பல் என்பது தனித்துவமானது. அவர் உறவினர்களை சிறப்பான முறையில் கவனிப்பார். விருந்து சாப்பிடும் மேஜையில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் இருக்கும். இது விருந்தினர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. மேலும் நடிகர் பிரபாஸ் நாட்டை ஆளும் மகாராஜாவுக்கு இணையானவர் என்று கூறியுள்ளார்.