
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. இதற்கிடையில் முன்னதாக அமெரிக்க நாட்டில் வழங்கப்படும் “கோல்டன் குளோப்” விருதுகளுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 2 பிரிவுகளில் நாமினேட் ஆகியது.
ஆங்கிலம் இல்லாத மொழிகளில் சிறந்த படத்துக்கான நாமினேஷன் மற்றும் ஒரிஜினல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு) நாமினேஷனிலும் கலந்துகொண்டது. இந்த நிலையில் நாட்டு..நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்குரிய கோல்டன் குளோப் விருதினை வென்று இருக்கிறது. அதன்பின் படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதே போல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #RRR படத்தின் #NaatuNaatu பாடலுக்காக #GoldenGlobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 11, 2023
Incredible ..Paradigm shift🔥👍😊👌🏻 Congrats Keeravani Garu 💜from all Indians and your fans! Congrats @ssrajamouli Garu and the whole RRR team! https://t.co/4IoNe1FSLP
— A.R.Rahman (@arrahman) January 11, 2023