டெல்லி உச்சநீதிமன்றம் பரஸ்பர சம்பந்தத்துடன் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறு கிடையாது என்று கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நிலையில், ஒரே பாலின திருமணத்திற்கும் சட்டப்படி அங்கீகாரம் வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள அங்கீகாரம் வழங்க முடியாது என கூறிய நீதிமன்றம் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் சட்டம் ஏற்ற வேண்டும் என கூறியது.
இருப்பினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் மாற்றம் இல்லை என்று கூறிய நீதிமன்றம் ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.