கடலூர் மாவட்டம் மதியனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மும்பையில் உறவினரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளனர். பின் துக்கம் விசாரித்த அவர்கள் ஊருக்கு செல்வதற்காக ரயில் மூலம் மும்பையிலிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவர்களுக்கு எதிர்ப்புறம் உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத 3 பேர் அந்த பெண்களிடம் நைசாக பேச்சுக் கொடுக்க தொடங்கினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த டீயை அந்த பெண்களுக்கு குடிக்குமாறு கொடுத்தனர்.

அப்போது அந்த பெண்கள் வேண்டாம் என்று மறுத்த போதும் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். அந்த டீயை குடித்த 2 பேருக்கும் சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின் அந்த பெண்கள் மயக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது அவர்களது கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் கம்மல்கள் திருடு போனது தெரியவந்தது. நல்லா பேசி கொடுத்துட்டு இருந்தாங்களே இப்படி நடக்கும்னு தெரியலையே.. என்று அந்தப் பெண்கள் புலம்ப ஆரம்பித்தனர்.. பின்னர் அருகில் இருந்தவர்கள் துணையுடன் இச்சம்பவத்தை பற்றி பாதிக்கப்பட்ட 2 பெண்களும் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 3 நபர்களையும் தேடி வருகின்றனர்.