ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இதையடுத்து சினிமாவில் கொடிகட்டி பறந்த ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இறங்க ஆரம்பித்தார். அதன்பின்னர் நடிகை ரோஜா அமைச்சரானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்.