மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த படத்தில் , உதயநிதியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில், மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில், “நான் எதை பார்த்து வடிவேலுவை ரசித்து கொண்டாடினேனோ, அதை மாமன்னனில் அவரை செய்யவிடவில்லை” என்று கூறியுள்ளார். படத்தின் போஸ்டர் பார்த்தாலே, வடிவேலு சீரிஸான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது