தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துவரும் நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படத்திற்காக தற்போது இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதோடு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தன்னுடைய கடைசி படத்தை இயக்க வேண்டும் என ரஜினி விருப்பப்படுவதாகவும் ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் ரஜினியின் கடைசி படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜுக்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.