கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது மனைவியை ஆதரித்து பிரச்சாரமும் செய்து வருகிறார். இடையிடையே படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த வாரம் படப்பிடிப்பின் போது நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதன் பிறகு டிஸ்சார்ஜ். இந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தொடர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.