தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை உடையவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் அயோத்தி. மேலும் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனியிடத்தை பிடித்திருக்கும் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், அவரது முழு சொத்து மதிப்பு ரூ.32 கோடி இருக்குமென தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.