தை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் கோவில்களில் திருமண விழாக்கள் கலை கட்டியது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 300க்கும் அதிகமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் புதுமணத் தம்பதிகளாக காட்சியளித்தனர். கடலூர் அருகே உள்ள தேவநாத சுவாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன.

திருமணத்திற்கு ஏராளமானோர் வந்ததால் கடலூர் பண்ருட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. அதே கோவிலில் காதணி விழா வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.