தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகராக இருந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கு 80 வயது ஆகும் நிலையில் புற்றுநோய் பாதிப்பால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட முற்பட ஏராளமான மொழிகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தேசிய விருது வென்ற நிலையில் தமிழக அரசின் கலை மாமணி விருதையும், கேரள மாநில அரசின் 4 விருதுகளையும் வென்றுள்ளார்.

இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அற்புத குரளுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் இனிவரும் தலைமுறையினர் இதயங்களையும் தொடும். மேலும் அவருடைய மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரசிகர்கள் அனைவருடனும் இந்த நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.