இளைஞர்கள் தூக்கத்திற்கு குறைவான நேரத்தை ஒதுக்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் 68 ஆயிரம் பேரிடம் தூக்கம் குறித்து ஆய்வு நடத்தியது. அதன்படி 31 விழுக்காடு இளைஞர்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது இல்லை என ஆய்வு முடிவு தெரிய வந்துள்ளது.
ஆண்களைவிட பெண்களே அதிக நேரம் தூங்குகின்றனர் எனவும் குழந்தைகள் முதியவர்களை விட இளம் வயதில் இருப்பவர்கள் மிகக் குறைவான நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்குகின்றனர் எனவும் தெரிய வந்துள்ளது.