தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. உடல் மீது ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியதால் மருத்துவமனை வளாகத்தில் படுத்து தூங்கிய கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் கூலி தொழிலாளியான பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியம் அங்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆனதால் பாலசுப்ரமணியம் மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக பாலசுப்பிரமணியனின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த பாலசுப்ரமணியனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *