
துருக்கியின் சிரியாவை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்ததோடு பலி எண்ணிக்கை 4,500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகவும், 2-வது முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பறவைகள் முன்கூட்டியே கணித்ததாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக அந்த பகுதியில் பறவைகள் வட்டம் அடித்து சுற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பாகவே துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகும் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்படும் என வரைபடத்தில் குறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.