ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 11ம் தேதி(நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தணிக்கைக் குழு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறத

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் அஜித் ரசிகர் மன்ற அலுவலகத்தில் துணிவு திரைப்படத்தின் 900 முன்பதிவு டிக்கெட்டுகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் சுமார் ரூபாய் 16 ஆயிரம் திருடப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.