தல அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் கோலாகலமாக வெளியாகியது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இப்போது அஜித்தின் மனைவியும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையுமான நடிகை ஷாலினி துணிவு திரைப்படத்தை காண வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. போர் ஃப்ரேம் தியேட்டரில் துணிவு படத்தின் Preview ஷோவை பார்க்கவந்த ஷாலினி ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.