இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அரசி, பருப்பு போன்ற அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பசுமை ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு தற்போது தீபாவளியை முன்னிட்டு இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை அரிசி பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அரிசி என்று அடிப்படையில் இரண்டு முறை அரிசி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த அறிவிப்பு அம் மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.