சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தி.மு.க பா.ஜ.கவை தவிர மற்ற கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படும். நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார்.
அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் குறைகள் இல்லாததால் தான் விஜய் விமர்சிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியிருந்தார். திமுக பாஜகவை தவிர மற்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.