
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிரைலர் வெளியீட்டின் போது பெரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள துவங்கியது. முதலாவதாக கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்துகொண்டனர் எனவும் டிரைலர் காட்சி அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்கள் செய்திளார்கள் சந்திப்பை நடத்தினர்.
அப்போது டைரக்டர் சுதீப்தோ சென் கூறியதாவது, இது நம் ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்குரிய ஒருபகுதி ஆகும். ஜனநாயகம் எனும் பெயரில் என்ன வேண்டுமென்றாலும் நடைபெறுவது என்பது சரியல்ல. நாட்டில் பயங்கரவாத நெட்வொர்க் குறித்து நாம் பேசுகையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சமூக தீங்குகளுக்கு எதிராக போராடவேண்டும் என்று கூறியுள்ளார்.