புது தில்லி – திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே தினசரி புதிய சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, ஏ.ஐ 829 என்னும் இந்த விமானம் திருவனந்தபுரத்தில் காலை 6:40 மணிக்கு புறப்பட்டு புது தில்லி விமான நிலையத்திற்கு காலை 9.25 மணிக்கு வந்தடைகிறது.

அதேபோல் ஏ.ஐ 830 என்ற விமான சேவை டெல்லியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும். இந்த விமானங்களில் 180 பயணிகள் பயணம் செய்து கொள்ளலாம். இந்த மார்க்கத்தில் விஸ்தாரா, indigo போன்ற நிறுவனங்களும் தினந்தோறும் மூன்று முறை சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நான்காவது சேவை இதுவாகும் என ஏர் இந்தியா கூறியுள்ளது.