மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அபர்ணா வினோத். இவர் தமிழ் சினிமாவில் நடுவன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வரும்  நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ரணில் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது நடிகை அபர்ணா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு விவாகரத்து முடிவை அறிவிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு‌ வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.