டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது

டெல்லி கஞ்சவாலா பகுதியில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம்பண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அந்த பெண்ணின் தந்தையே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

அந்த பெண் தனது காதலனை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தந்தை தனது மகளை காரில் அழைத்து சென்று பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.