ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். சமீபத்தில் லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமீபத்தில் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது திருப்பதியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது லட்டு விநியோக மையத்தில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு கவுண்டரில் யுபிஎஸ் இல் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரும்புகை தீமிபத்தை ஏற்பட்ட நிலையில் பக்தர்கள் உடனடியாக அலறி அடித்துக் கொண்டு ஓடினர். உடனடியாக அந்த இடத்திற்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு யுபிஎஸ்ஐ அனைத்து தீயை அணைத்தனர். மேலும் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.