மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி விவகாரத்தில் கைதான ஷேக் ஷாஜகான் திரிணாமூல் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகளுக்கு நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு வழக்கில் டிஎம்சி நிர்வாகி ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை தொடர்ந்து ஷேக் ஷாஜகானை கட்சியிலிருந்து நீக்கியது திரிணாமூல் காங்கிரஸ்.