சென்னை அடுத்த வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராவமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும் அறிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்துவிட்டு தப்பியோடி அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் அவர் மீது மர்மகும்பல் வெடிகுண்டு வீசிவிட்டு சென்றதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரது ஒரு கையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.