ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. அதன்பிறகு பாஜக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தான் பலமாக உள்ளது.

அதன் காரணமாகத்தான் மற்ற கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டது. சட்டசபை மரபை மாற்ற சொன்ன கவர்னர் தான் தவறு செய்துள்ளார். ஆளுநர் கூறுவதால் சட்டமன்ற மரபை மாற்ற முடியாது. முதல்வருக்கு இவ்வளவு ஆணவம் இருக்கிறது என்று கூறும்போதே கவர்னருக்கு எவ்வளவு ஆணவம் இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது என்று கூறினார். மேலும் முன்னதாக கவர்னர் சட்டசபையை புறக்கணித்தது தொடர்பாக திமுக கண்டனம் தெரிவித்த நிலையில் அதற்கு இன்று கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.