திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சீமானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது கடந்த 1969 ஆம் ஆண்டு சிபா ஆதித்தனார் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து அமைச்சராகிவிட்டார். திமுகவுடன் இணைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் பெயரை வைத்து சீமான் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தும் அதிகாரமே கிடையாது. ஒருவேளை நான் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சீமானால் கட்சியை நடத்தவே முடியாது.

திமுகவில் இணைக்கப்பட்ட கட்சி பெயரை வைத்து கட்சி நடத்துவது மோசடி என சாடிய அவர் சீமானுக்கு மட்டும் யோகியதை இருந்தால் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லட்டும் என்று கூறியுள்ளார். மேலும் முன்னதாக பெரியார் பற்றிய சீமான் விமர்சித்தது கண்டனத்திற்கு உள்ளான நிலையில் திமுகவினருக்கு தைரியம் இருந்தால் ஈரோட்டில் பெரியார் பெயரை சொல்லி ஓட்டு கேட்கட்டும் என்று சவால் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.