திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் விழாவில் கலந்துகொண்ட திருமாவளவன் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அப்போது திமுகவின் இரட்டைக் குழல் துப்பாக்கியில் மூன்றாவது குழல் துப்பாக்கியாக விசிக கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்றார்.
அதன் பிறகு பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் என்பது இந்தியாவில் யாரும் சிந்திக்காதது. நான் அடிக்கடி சிந்தித்து பூரித்துப்போன ஒரு திட்டம் என்றால் அது சமத்துவ புரத்திட்டம் தான். எந்த ஒரு கூட்டணி கட்சியாக இருந்தாலும் அது தேர்தலுக்கு பின் சிதறி போகும். ஆனால் தற்போதும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு மு.க ஸ்டாலின் தலைமை மட்டும் தான் காரணம் என்று கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலினை பார்த்து எதிரிகள் அச்சப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.