தமிழகத்தில் புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று மிக முக்கியமான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மிக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் நலன் சார்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களை எவ்வித தொய்வும் இன்றி விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தினார். இந்த அதிரடி ஆலோசனைக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் முக்கிய உயர் அதிகாரிகள் அனைவரும் நேரில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், பணிகளைத் தரமாகவும் காலக்கெடுவுக்குள்ளும் முடித்து மக்க பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
