அமெரிக்க நாட்டில் ஓரிகான் ரோடியோ என்ற பகுதி உள்ளது. இங்கு  காளை சவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்த போது ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் கால்நடை ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு காளை மாடு தடுப்பை தாண்டி பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் வேகமாக நுழைந்தது.

இதனால் பார்வையாளர்கள் அங்கும் இங்குமாக தலை தெறிக்க ஓடினர். அப்போது ஒரு பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக மாட்டை அடக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.