தாய்லாந்து நாட்டில் கடுமையான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி பாதிப்படைந்தனர். பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தண்ணீரில் மிகப்பெரிய ராட்சச பாம்பு ஒன்று மிதந்து வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி திகிலூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ரெட்டிகுலேட்டட் வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். மேலும் இந்த பாம்பின் உடல் வீங்கிய நிலையில் இருப்பதால் அது வெள்ளத்திற்கு முன்பாக ஒரு நாயை முழுசாக விழுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,