பீகார் மாநிலத்தில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குஷ்பு குமாரி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் குஷ்பு குமாரியின் நடத்தையின் மீது அவருடைய கணவருக்கு திடீரென சந்தேகம் வந்த நிலையில் அது தொடர்பாக மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரிவர பதிலளிக்கவில்லை. இதற்கிடையில் அவருடைய வீட்டிற்கு இரவு நேரத்தில் அடிக்கடி ஆண் ஒருவர் வந்து சென்றுள்ளார்.
இது ராஜேஷ் குமாரின் தாய்க்கு தெரியவந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அந்த நபருடன் குஷ்பூ பேசிக் கொண்டிருந்தார். இதனை அவரின் மாமியார் பார்த்த நிலையில் அந்த ஆண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் குடும்பத்தில் தகராறு வெடித்தது. இது தொடர்பாக ராஜேஷ் குமாருக்கு தெரிய வந்த நிலையில் மனைவியிடம் விசாரித்தார். அப்போது பல அதிரவைக்கும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர் பெயர் சந்தன் குமார். இவரும் குஷ்பு குமாரியும் சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருந்த நிலையில் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில் அதற்குள் குஷ்பவை அவருடைய பெற்றோர் கட்டாயப்படுத்தி ராஜேஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரிய வந்தது. திருமணத்திற்கு பிறகும் தன் காதலன் நினைவாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் அவருடன் செல்போனில் பேச ஆரம்பித்ததோடு இரவு நேரத்தில் வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனைக் கேட்டு ராஜேஷ்குமார் கோவப்படவில்லை. அதற்கு மாறாக அவர் ஊரைக் கூட்டி தன் மனைவி மற்றும் அந்த வாலிபர் காதலிப்பதை அறிவித்ததோடு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறினார். மேலும் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கூறி அவர் தானே முன் நின்று கோவிலில் திருமணமும் செய்து வைத்தார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.