தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் பூஜை அண்மையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், நாளை மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் இசை உரிமையை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Happy to be associated with @SonyMusicSouth to blast #Thalapathy67 music through your speakers 🔊 🔥
Audio rights acquired by #SonyMusic 💥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#Thalapathy67OnSonyMusic pic.twitter.com/63BKQIV3V5
— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023