தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருகிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. அதேபோன்று அடுத்ததாக தளபதி-68 படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு டைரக்டு செய்ய ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பற்றி இதுவரையிலும் வெளிவாராத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் பிரபல ஜோதிடர் ஒருவரின் பேச்சை கேட்டுதான் தன் முடிவுகளை எடுக்கிறாராம். தளபதி விஜய்யின் அரசியில் என்ட்ரி கூட அந்த ஜோதிடர் ஓகே என உத்தரவு கொடுத்ததனால் நடந்தது என சொல்லப்படுகிறது. அந்த ஜோதிடர் பல்வேறு முன்னணி அரசியல் வாதிகளுக்கு ஜோசியம் பார்க்கிறாராம். இத்தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.