தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்துள்ள நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்த உள்ளார். இந்நிலையில் முதல் மாநாட்டினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் இன்று நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்தப் படத்தில் வேஷ்டி சட்டை அணிந்தபடி நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதன்பிறகு இயக்குனர் வினோத், பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே, மமிதாபைஜு உள்ள படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் நடிகர் விஜய் இன்று ஒரே நாளில் தொடக்க உரை மற்றும் முடிவுரை எழுதியுள்ளார். அதாவது தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய விஜய் சினிமா வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டுள்ளார். மேலும் இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாடுவதா இல்லை கவலைப்படுவதா என்று மகிழ்ச்சி கலந்த வேதனையில் இருக்கிறார்கள்.