தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், அண்மையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் 20 வருடங்களில் நடிக்காத புது கதாபாத்திரத்தை வாரிசு திரைப்படத்தில் செய்துள்ளதோடு குடும்ப கதையம்சத்தில் படம் உருவாகியுள்ளதால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.‌

இந்நிலையில் ஓவர் சீஸ் சென்சார் போர்டு அதிகாரி உமர் சந்த் வாரிசு படத்தை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று தன்னுடைய முதல் விமர்சனத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடிகர் விஜய் நடிப்பு, மேனரிசம், வசனங்கள் போன்றவற்றில் தான் ஒரு மிருகம் என்பதை நிரூபித்துள்ளார். ஒரு ஃபேமிலி ட்ராமாவில் நடிகர் விஜய் பலவிதமான உணர்ச்சிகளை காண்பித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் இதயத்தை தொடும் உணர்வுகள் இருக்கிறது.

அதன்பிறகு இந்த படத்தில் அனைத்து விதமான உறவுகளுக்கும் இடையே இருக்கும் இணைப்பை தெளிவாக காண்பித்துள்ளனர். படம்  தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதோடு ஒளிப்பதிவு, இசை மற்றும் துணை கதாபாத்திரங்கள் என அனைத்துமே படத்திற்கு பக்கபலம். நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் காம்பினேஷன் செம ஹாட் ஆக இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தை பொதுமக்களும், குடும்பங்களும் கண்டிப்பாக விரும்புவார்கள். விஜய் இஸ் பேக் என்று பதிவிட்டுள்ளார். மேலும் வாரிசு படத்திற்கு 5-க்கு 3.5 டேட்டிங் கொடுத்துள்ளார்.