பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்தது. சற்று நேரத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ளப் போகிறார். அங்கு விஜய் என்ன பேசப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி துவங்கி நடிகர் விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
விஜயின் பேச்சை கேட்பதற்காக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து விட்டார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் தலைவா தளபதி என சத்தமாக குரல் எழுப்பினர். அவர்களைப் பார்த்து விஜய் கையேசித்துள்ளார். அந்த காட்சி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.