தமிழகத் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் அறை நுழைவாயிலில் சிவப்புத் துணி கட்டப்பட்ட விவகாரம் தற்போது அரசு வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நீர் வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள புஸ்ஸி ஆனந்த்முன் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவின் நிலைப்பாடு, மேக்கேதாட்டு அணை விவகாரம், விவசாயிகளின் குறைகள் மற்றும் மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் அடுத்தடுத்துக் குவிந்து வருவதால் அவர் கடும் சவால்களைச் சந்தித்து வருகிறார். இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியாக, கடந்த ஒரு வாரமாகச் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறை வாசலில் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சிவப்புத் துணி ஒன்று கட்டப்பட்டுள்ளது. தனது குடும்பத் தெய்வமான பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மந்திரித்து வழங்கப்பட்ட இந்தத் துணியை அவர் தனது அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் நேர்மறை ஆற்றலுக்காகத் தொங்கவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் உட்படப் பல தலைவர்கள் எண் கணிப்பிலும், ஜோதிடத்திலும் தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதைப் போலவே, எப்போதும் நெற்றியில் திருநீற்றுடன் வலம்வரும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்தும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் தொங்கும் சிவப்பு துணி : காரணம் இது தான்.
தவெகவில் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் பலரும் ஜோதிடம், மாந்தீரீகம் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஜய் வேஷ்டி, சட்டையில் வருவது, கடலை… pic.twitter.com/VxJt5YeBOx
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 15, 2026
“>
தொடர்ச்சியான துறைசார் சிக்கல்களுக்கு மத்தியில் அமைச்சரின் அலுவலக அறையில் அரங்கேறியுள்ள இந்த ஆன்மிக நிகழ்வு அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
