கேரளாவில் இளைஞர்கள் சிலர் தர்ப்பூசணியை வைத்து சிக்கன் பிரியாணி செய்துள்ள வீடியோ வைரலாகி உள்ளது. கிராமத்து வயல்வெளியில் சமைத்து அதை வீடியோவாக வெளியிடுவது தற்போது பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் சிலர் தர்பூசணிகளை வெட்டி, அதிலிருந்து சாறு எடுகின்றனர்.

அந்த சாற்றை மசாலாவுடன் வறுக்கப்பட்ட கோழிகளில் ஊற்றி, பின்னர் அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து வேக வைத்து பிரியாணி சமைக்கின்றனர். இந்த புதுவகையான டிஷ் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.