தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த இலியானா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை இலியானாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் பணம் வாங்கிவிட்டு அந்த படத்தில் நடிக்காததாகவும் அந்த பணத்தை இலியானா திரும்பக் கொடுக்காததாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடனும்‌ நடிகை இலியானாவுக்கு பிரச்சனை ஏற்பட்டதால் அவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே நடிகை இலியானாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிரச்சனைகளை இலியானா சுமுகமான முறையில் பேசி தீர்த்து விட்டதாகவும், இனி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் இலியானா தெலுங்கு மற்றும் தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது