தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் நேற்று இரவு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயும் இரங்கல் தெரிவித்து x பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவினால் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. அவர் கடந்த 40 வருடங்களாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். மேலும் அவருடைய இறப்பு தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாகும் என்று பதிவிட்டுள்ளார்.