சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணா (26)முன்னணி நடிகர் ஒருவரின் படப்பிடிப்புத் தளத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நடிகர் ஷாந்தனு, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இவரை கடவுள் சீக்கிரம் அழைத்துக்கொண்டார். இறப்பதற்கு முன் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் பேச முடியவில்லை என்று வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.