
பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி கருணாஸ். இவர் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழி கொள்கை மட்டும் தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிறைவாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது.
இந்த குற்றங்கள் அதிகரிக்க இன்றைய வாழ்க்கை முறை மற்றும் செல்போன் பயன்பாடு என்பது முக்கிய காரணம். செல்போன் பயன்படுத்துவதால் தவறான செய்திகள் மக்களை உடனுக்குடன் சென்றடைகிறது. சிறிய பிரச்சனைகளை ஊடகங்கள் பெரிதாக்கும்போது அதே பிரச்சினை மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்பதுதான் என்னுடைய கருத்து. சில இடங்களில் தவறு நடந்தால் கூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. மேலும் திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார்.