தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமை தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு நேற்று (ஜன,.5) வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அவற்றில் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் உள்ள டிஆர்ஓ அலுவலகம் (அல்லது) இணையதளம்(www.nvsp.in.) வாயிலாக விண்ணப்பிக்கலாம். வருகிற ஏப்ரல்-1, ஜூலை-1, அக்,.-1 போன்ற நாட்களை தகுதி ஏற்படுத்தும் நாட்களாக கொண்டு அவர்களது பெயர் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.