தமிழ்நாட்டில் மின்வாரிய அலுவலகங்களுக்கு பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினங்கள். கடந்த நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதாவது சனிக்கிழமை கூடுதலாக ஒரு நாள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை சனிக்கிழமை முன்னிட்டு தமிழக மின்சார வாரியம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 9-ம் தேதி வேலை நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த அலுவலகங்களுக்கு நேரில் செல்பவர்கள் நாளை செல்லலாம். தமிழ்நாட்டில் 40 சதவீத பயணங்கள் நேரில் சென்று மின்சார கட்டணம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை விடுமுறை கிடையாது என்பதால் இதனை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.