தமிழ்நாட்டில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய ‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நவம்பர் 7 வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.