
பாஜக கட்சிக்கு பொதுவாக 3 வருடங்களுக்கு ஒருமுறை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழக பாஜக கட்சியின் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி இந்த மாதத்திற்குள் புதிய தலைவர் யார் என்று அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ரேசில் இருப்பதாக கூறப்பட்டது.
அதே சமயத்தில் மீண்டும் அண்ணாமலை தான் புதிய தலைவராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் தற்போது இந்த வாரத்திற்குள் புதிய தலைவர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் எனவும் அண்ணாமலை மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.