ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். எனவே பொது விடுமுறை நாளான இன்று  ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆவண பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். இது குறித்து அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவண பதிவு காண கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.