சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகின்றது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.